Tuesday, September 28, 2010

மழலை கவிதை



மழையில் நனய்ந்த கதை சொல்லவா இல்லை
மழலை மொழி பேசும் சுவை சொல்லவா
இதழில் இதழாய் இணைந்த கதை சொல்லவா
இதழும் இனிக்கும மழலை கலை அல்லாவா

கனவும் நினைவாகும் அவள் வரவால்
கவிதை உருவாக்கும் மழலை உறவால்
கணநேர சுகம் தானே அவளிடத்தில்
காலமது போதாது மழலை சுகத்தில்

காத்திருந்து சுகம் தருவாள் என்னிடத்தில்
பூத்திருந்து புன்னகை வருமே எவரிடத்தும்
பார்த்திருந்து பழகினோம் சில காலம் -நீயோ
அன்னையின் கருவில் இருந்தாய் பத்துமாதம்